சனி, 11 மே, 2024
போருக்கு பிந்திய காலம்
யார் யாரோடு என்று புரியவில்லை
முட்கம்பிகள் சிக்கிக்கிடக்கின்றன
முட்படுக்கையில் வாழ்வு
காணாமலான பட்டியலில்
புத்தபகவானே முதலிடம்
காவியுடையில் சாத்தான்கள்
சமாதானம் எட்டும் தூரத்திலில்லை
பாதாளத்தில் பொருளாதாரம்
பஜிரோவில் அதிகாரம்
மொய்க்கும் கொசுக்களாய் படையினர்
குடிசையில் பசியோடு குழந்தைகள்
வேர்களை பிடுங்கும் அரசு
உறங்குநிலை விதைகளை அறியுமா?
காலத்திடம் கேள்வி இருக்கும்
தகுந்த பதிலும் இருக்குமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக