மருத்துவமனை
தாயொருவர்
கணுக்கால் சுளுக்கி வந்திருந்தார்
மகன் திடீரென இறந்த துக்கம்
முகத்தில் பூசப்பட்டிருந்தது
எப்ப வந்தனீங்கள் அம்மா?
ஒருமாதம்
முகத்தில் ஒரு கலவரம்
வலிக்குதா அம்மா
ஓம்
நீங்கள் நடக்கிறீங்கள்தானே
அது பிரச்சனை இல்லை
பேரன் வருவான் தம்பி
மொழிபெயர்த்து சொல்லுவியா?
முகத்தில் ஒரு ஏக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக