சனி, 18 மே, 2024
May-18
முல்லைத்தீவில்
கம்பிவேலிக்குள் மக்கள்
சூழ இராணுவம்
அகோர வெயில்
குடிக்க நீர் கிடைக்கவில்லை
முதுகிலும் காலிலும் இருந்த எரிகாயங்கள்
வியர்வையில் மேலும் எரிந்தன
சரணடையுமாறு அறிவிப்புகள்
மனது
நேற்று இரவுச்சண்டையில்
அண்ணையை நகர்த்தியிருப்பர்
என்று நம்பியிருந்தது
ஒரு சடப்பொருளாக இருந்தேன்
யாரையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியவில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக