வியாழன், 16 மே, 2024
May-17
இன்றைய நாளின் ஒவ்வொரு மணித்துளியும்
ஒவ்வொரு நாளாய் இருந்தன
பதினைந்து வருடங்கள் கடந்தாலும்
அந்தநாள் வலி யாருக்கும் வரக்கூடாது
நேற்றுவரை முடிபுகள் இருந்தன
இன்று என்னவாயிற்று ?
யாராவது ஒழுங்கமைப்பார்களா?
அடுத்த நாள் நிச்சயமில்லை
சா பயம் துளியுமில்லை
இனி யாரையும் காணப்போவதுமில்லை
பழைய திட்டம் மட்டும் மனதில்
வேறு எதுவுமில்லை
கூப்பிடு தூரத்தில் எதிரி
யாரிடமும் விடை பெறமுடியவில்லை
அந்தரத்தில் நகர்ந்தேன்
இன்னும் நம்பமுடியவில்லை
என்ன நடந்தது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக