புதன், 1 மே, 2024
எங்கும் நீ இல்லை
எந்த விம்பங்களிலும் நீ இல்லை
தொட்டுப்போகும் காற்றில் நீ இருக்கிறாய்
சுவாசமாய் நீ இருக்கிறாய்
பறவைகளின் நளினத்தில் நிறைகிறது வயல்
சில பறவைகளில் பூக்கள் பூத்திருந்தன
இசையோடு பூத்திருந்த பூக்கள்
அசைந்ததில்
நான் வானத்தில் இருந்தேன்
ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பெயர்
வெவ்வேறு மொழியிலும்
பறவைகளின் உறவுகளாய்
சுமந்து திரியும் மாடுகளை
வியந்து பார்க்கிறேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக