நீ நடந்துலாவிய காடுகள்
பறவைகளின் சத்தம்
நீந்திய கடல்
அலைகளின் நடனம்
உருமறைத்த பயிற்சித்திடல்
பதுங்கியிருக்கும் நிழல்
ஒவ்வொருவரிலும் கரிசனை
அது உனக்கேயானது
எல்லாவற்றிற்கும் அருகில்
நீ
குழைத்துத்தரும் சொற்கள் இருக்கின்றன
நீதான் இல்லை
சூரியன் இல்லா பூமியில்
ஒரு கைவிளக்காக உன்நினைவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக