இரு அலைகளுக்கிடையில்
நீ புன்னகைத்துப்போனாய்
மெல்லிய இருளிலும் அது ஒளிர்ந்தது
துயரின் வலி அகன்றது
ஆழ்கடலாகவே உனை பார்த்தோம்
இன்று அலைகள் இல்லா கடலில்
ஒரு பெரும் அமைதி கனக்கிறது
சூரிய சந்திரர் உலாவும்
நீலவானமாய் பார்க்கிறோம்
எம் வலியினை நீ அறியாய்
அது போதும் எங்களுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக